Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மேலும் அதிகமான பட்டதாரிககளுக்கு கிடைக்கும் முழுநேர வேலைகள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மேலும் அதிகமான பட்டதாரிகள் முழுநேர வேலைகளைப் பெறுகின்றனர்.

வேலை நியமன விகிதம் நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பும் வேளையில் அந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு, பட்டதாரிகளில் 84 விழுக்காட்டினர் இறுதித் தேர்வுகளை முடித்த 6 மாதங்களுக்குள் முழுநேர நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர்.

2020ஆம் ஆண்டில் பதிவான சுமார் 70 விழுக்காட்டைவிட அது அதிகம்.

2019இல் பதிவான சுமார் 82 விழுக்காட்டையும் அது மிஞ்சிவிட்டது.

ஒட்டுமொத்த வேலை நியமன விகிதம் கடந்த ஆண்டு சற்றே அதிகரித்து 94.4 விழுக்காடாகப் பதிவானது.

தன்னாட்சிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலை நியமனம் குறித்து நடத்தப்பட்ட கூட்டுக் கருத்தாய்வில் அது தெரியவந்தது.

கடந்த ஆண்டு பகுதிநேர வேலையில் சேர்ந்த பட்டதாரிகளின் விகிதம் அதற்கு முந்திய ஆண்டைவிடக் குறைந்தது.

வேலை பெறமால் இருந்தோர் விகிதம் 5.6 விழுக்காடு.

அது அதற்கு முந்திய ஆண்டில் பதிவான 6.4 விழுக்காட்டைவிடச் சற்றுக் குறைவு.

சென்ற ஆண்டு பட்டம் பெற்றவர்களின் இடைநிலைத் தொடக்கச் சம்பளம் அதற்கு முந்திய ஆண்டைவிட 100 வெள்ளி அதிகரித்து 3,800 வெள்ளியாக இருந்தது.

பட்டதாரிகளுக்கு வாழ்க்கைத்தொழில் தொடர்பான வழிகாட்டுதலையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கிவருவதாகத் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் கூறுகின்றன.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

மேலும் செய்திகள் கட்டுரைகள்