மாபெரும் சிங்கப்பூர் விற்பனையோடு இணையும் Lazada
The Great Singapore Sale எனப்படும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை, இணைய வர்த்தகக் தளமான Lazada-வுடன் இணைந்து செயல்படவுள்ளது.

படம்: REUTERS/Thomas White/Illustration
The Great Singapore Sale எனப்படும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை, இணைய வர்த்தகக் தளமான Lazada-வுடன் இணைந்து செயல்படவுள்ளது.
கிருமிப்பரவலுக்கு எதிராகக்
கடுமையாக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மாற்றம் கண்டுள்ள சில்லறை வர்த்தகப்போக்கு- ஆகியவற்றுக்கு இடையே, இது “சரியான நேரத்தில்”எடுக்கப்பட்ட முடிவு என்று அதன் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
மாபெரும் சிங்கப்பூர் விற்பனை, 27 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் அந்த விற்பனை, இவ்வாண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதிவரை இடம்பெறும் என்று சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (Singapore Retailers Association) தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு, முதல் முறையாகக் கிருமித்தொற்றுச் சூழல் காரணமாக அது இணையத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர், மே இறுதிவரை 2ஆம் கட்டக் கட்டுப்பாடுகளுக்குத் திரும்பியுள்ளதால்,
சில்லறை விற்பனையாளர்கள் இணையத்துக்கு இடம்மாற உதவுவதில் Lazada-வின் நிபுணத்துவம் உதவும் என்று சங்கத்தின் தலைவர் ஆர். தினகரன் தெரிவித்தார்.
கடைத் தொகுதிகளுக்குள் செல்வோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்தப் பங்காளித்துவம் இடம்பெறுவதையும் அவர் சுட்டினார்.