Skip to main content
ComLink Plus திட்டத்துக்கு $150,000 கூடுதல் உதவி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ComLink Plus திட்டத்துக்கு $150,000 கூடுதல் உதவி - சுமார் 140 பேர் பயன்பெறவிருக்கின்றனர்

வாசிப்புநேரம் -
ComLink Plus திட்டத்துக்கு $150,000 கூடுதல் உதவி - சுமார் 140 பேர் பயன்பெறவிருக்கின்றனர்
படம்: CNA/Tan Wen Lin
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ComLink Plus திட்டத்தில் பங்குபெறும் பிள்ளைகளுக்குக் கூடுதல் உதவி கிடைக்கவிருக்கிறது.

புக்கிட் மேராவைச் சேர்ந்த சுமார் 140 பேர் பயன்பெறுவர்.

படிப்புக்கும், கலை, விளையாட்டுத் துறைகளில் திறனை மேம்படுத்தவும் உதவி கிடைக்கும்.

UOL - Pan Pacific Hotel நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டில் ஜூரோங் வெஸ்ட்டில் சமூக மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கின.

அப்போது 57 பிள்ளைகள் அதில் கலந்துகொண்டனர்.

தற்போது அங்கு 120 பிள்ளைகள் அதில் உதவி பெறுகின்றனர்.

ஆற்றல்களை வளர்ப்பது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை மேம்படுத்தலாம். மற்ற பிள்ளைகளுடன் நட்புறவைக் கொண்டிருக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும் துணைப்பாட வகுப்புகளும் மானியங்களும் வழங்கப்படுகின்றன.

கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஜூரோங் வெஸ்ட்டில் தொடங்கிய உதவித்திட்டம் குயின்ஸ்டவுன் (Queenstown), புக்கிட் மேரா ஆகிய வட்டாரங்களுக்கு விரிவடைந்திருப்பதை வரவேற்பதாகச் சொன்னார்.

தீவின் மற்ற பகுதிகளிலும் நிறுவனங்களும் அமைப்புகளும் அதுபோன்ற உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்