இந்தோனேசிய எரிமலை வெடிப்பு - காப்பாற்றப்பட்ட சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்
படம்: AFP/BNPB
இந்தோனேசியாவின் டுக்கோனோ (Dukono) எரிமலை வெடிப்பில் காப்பாற்றப்பட்ட சிங்கப்பூர் மலையேறிகள் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் நேற்றிரவு சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்ததாக CNA ஊடகம் தெரிவித்தது.
மலையேறிகள் என்று நம்பப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் அணுகியபோது அவர்கள் பேச மறுத்ததாகக் கூறப்பட்டது.
மலையேறிகள் ஜக்கர்த்தாவிற்குச் சென்றுகொண்டிருந்ததாக வெளியுறவு அமைச்சு முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஜக்கர்த்தாவிலிருந்து நேற்று மாலை ஐந்தே முக்கால் மணிக்குப் புறப்பட்ட கருடா (Garuda) விமானம் சிங்கப்பூரை இரவு 8.20 மணிவாக்கில் வந்தடைந்தது.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒன்பது மலையேறிகளுக்கும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என்று CNA சொன்னது.
எரிமலை வெடிப்பில் சிங்கப்பூரர்கள் இருவர் மாண்டனர்.