Skip to main content
நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்கள் - மாணவர்களிடம் இனி பேசப்படும்

வாசிப்புநேரம் -
தொடக்கப்பள்ளிகளில் நடத்தப்படும் வருடாந்திர சுகாதாரப் பரிசோதனையில் இனி மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பற்றி எடுத்துச்சொல்லப்படும்.

Grow Well SG எனும் புதிய திட்டத்தில் அது அறிமுகம் செய்யப்படுமென்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) நாடாளுமன்றத்தில் சொன்னார்.

தொடக்கநிலை ஒன்று முதல் மூன்று வரையுள்ள மாணவர்களுக்கு அது பொருந்தும்.

சுகாதாரப் பரிசோதனைக்கு முன் பெற்றோரிடம் கருத்தாய்வு நடத்தப்படும். அதில் பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் குறித்துக் கேட்கப்படும்.

பெற்றோரின் பதில்களை வைத்து தாதியரும் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் பயிற்றுவிப்பாளர்களும் பிள்ளைகளிடம் சுமார் அரை மணி நேரம் தனித்தனியாகப் பேசுவார்கள் என்று திரு ஓங் சொன்னார்.

அதன் மூலம் 'வருமுன் காப்போம்' எனும் சுகாதார நடைமுறையைப் பிள்ளைகளிடம் வலியுறுத்தமுடியும்.

Grow Well SG திட்டம் பலன் அளிக்கிறதா என்பதையும் அரசாங்கம் கண்காணிக்கமுடியும் என்று திரு ஓங் கூறினார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்