Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"வளர்ச்சி, சமூகம், நம்பிக்கை - அறிவார்ந்த தேசத்தின் அடுத்த கட்டத்துக்கு முக்கியம்" - பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
 "வளர்ச்சி, சமூகம், நம்பிக்கை - அறிவார்ந்த தேசத்தின் அடுத்த கட்டத்துக்கு முக்கியம்" - பிரதமர் வோங்

(படம்: CNA/Lim Li Ting)

சிங்கப்பூர் அறிவார்ந்த தேசத்தின் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வேளையில் வளர்ச்சி, சமூகம், நம்பிக்கை ஆகிய அடிப்படைக் கூறுகள் முக்கியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அறிவார்ந்த தேசம் 2.0 திட்டத்தைத் தொடங்கிவைத்துச் சற்றுமுன் அவர் பேசினார்.

அறிவார்ந்த தேசத் திட்டம் 2014ஆம் ஆண்டில் அப்போதய பிரதமர் லீ சியன் லூங் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போதிருந்து இன்று வரை சிங்கப்பூர் கணிசமாய் முன்னேறியுள்ளதாகத் திரு. வோங் சொன்னார். அன்றாட வாழ்க்கையில் அதை உணரலாம் என்றார் அவர்.

சிங்கப்பூர் அறிவார்ந்த தேசமாக நல்ல வளர்ச்சி கண்டுள்ளபோதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இன்று திறன்பேசிகளும் சமூக ஊடகங்களும் முக்கியத் தொடர்புத்தளங்களாக உள்ளன. அண்மையில் செயற்கை நுண்ணறிவில் பல புதிய கண்டுபிடிப்புகள் இருப்பதையும் பிரதமர் சுட்டினார்.

தொழில்நுட்பம் அனைவரின் வாழ்விலும் இன்னும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இவை அனைத்தும் காட்டுகின்றன. பல வாய்ப்புகள் இருந்தாலும் புதிய சவால்களும் இருக்கும் என்றார் பிரதமர்.

அதனால் அறிவார்ந்த தேசத்துக்கான கொள்கைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்