Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'GST-யை எப்போது உயர்த்துவது என்பதைத் தீர்மானிப்பதில் அரசாங்கம் ஒட்டுமொத்தப் பொருளியல் சூழலையும் கவனமாய்ப் பரிசீலித்து வருகிறது'

' GST-யை எப்போது உயர்த்துவது என்பதைத்  தீர்மானிப்பதில் அரசாங்கம் ஒட்டுமொத்தப் பொருளியல் சூழலையும் கவனமாய்ப் பரிசீலித்து வருகிறது ' 

வாசிப்புநேரம் -
'GST-யை எப்போது உயர்த்துவது என்பதைத் தீர்மானிப்பதில் அரசாங்கம் ஒட்டுமொத்தப் பொருளியல் சூழலையும் கவனமாய்ப் பரிசீலித்து வருகிறது'

கோப்புப்படம்

பொருள் சேவை வரியை (GST) எப்போது உயர்த்துவது என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானிப்பதில் அரசாங்கம், ஒட்டுமொத்தப் பொருளியல் சூழலையும் கவனமாய்ப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிதியமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார்.

உத்தேசப் பொருள் சேவை வரி உயர்வைக் காலவரம்பின்றித் தள்ளிப்போட முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

சிங்கப்பூரில் வசூலிக்கப்படும் பொருள் சேவை வரியை ஏழில் இருந்து ஒன்பது விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

பணவீக்க நெருக்கடி காரணமாக அரசாங்கம் அந்த உயர்வைத் தள்ளிப்போடுவதுபற்றிப் பரிசீலிக்குமா என புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா (Liang Eng Hwa) கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் இந்திராணி அந்தக் கேள்வியில் இரண்டு அம்சங்கள் இருப்பதாகக் கூறினார்.

பொருள் சேவை வரி உயர்வுத் தேதியைத் தாமதப்படுத்துவது ஓர் அம்சம்.

அந்த வரி உயர்வு சிங்கப்பூரர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அரசாங்கம் தாமதப்படுத்துமா என்பது மற்றோர் அம்சம்.

பொருளியலின் நிலை, அதிகரிக்கும் செலவுகள், தற்போது நடப்பிலுள்ள வரிகளால் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும் ஆகியவற்றைப் பொறுத்து வரி உயர்வுக்கான திட்டவட்டமான காலம் தீர்மானிக்கப்படும் என்றார் குமாரி இந்திராணி.

பொருள் சேவை வரி உயர்வு சிங்கப்பூரர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தவரை அது சில ஆண்டுகள் கழித்தே உணரப்படும்வகையில் சில அம்சங்களை அரசாங்கம் வடிவமைத்துள்ளதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரர்களில் பெரும்பாலானவர்கள் அதன் தாக்கத்தை உணர்வதைத் தாமதிப்பது 6 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள, Assurance Package எனப்படும் மறுவுறுதிப்படுத்தும் தொகுப்புத் திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்படும்.

அதன்படி சிங்கப்பூர்ப் பெரியவர்கள் அனைவருக்கும் ஐந்தாண்டுகளுக்கு 700 வெள்ளி முதல் 1,600 வெள்ளிவரை ரொக்கம் வழங்கப்படும்.

ஓரறை முதல் மூவறை வரை உள்ள வீடுகளில் வசிப்போர் பொருள் சேவை வரி உயர்வால் 10 ஆண்டுகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்டத் தேவையான ரொக்க உதவியைப் பெறுவர் என்பதை அமைச்சர் இந்திராணி ராஜா சுட்டினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa