Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பிள்ளைகள் திரையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நடைமுறை அறிமுகம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பிள்ளைகள் திரையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நடைமுறை அறிமுகம்

(படம்: CNA/Lim Li Ting)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகளிலும் பிள்ளைகள் திரையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Grow Well SG எனும் தேசியத் திட்டம், பிள்ளைகளுக்கு இடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்த உதவும் என்று சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தொடக்கமாக, 12 வயது வரையுள்ள பிள்ளைகளிடம் திட்டம் கவனம் செலுத்தும். பிறகு மூத்த பிள்ளைகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும்.

3 வயது முதல் 6 வயது பிள்ளைகள், பள்ளிக்கு அப்பால் 1 மணி நேரத்துக்கும் குறைவாகத் திரையைப் பயன்படுத்தும்படி வழிகாட்டி நடைமுறை எடுத்துரைக்கிறது.

7 முதல் 12 வயது பிள்ளைகள், ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கும் குறைவாகவே திரையைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

பெற்றோர் பிள்ளைகளுக்குத் கட்டுப்பாடின்றித் திறன்பேசிகளையும் சமூக ஊடகத் தளங்களையும் பயன்படுத்தத் தருவதைத் தவிர்க்கும்படியும் பரிந்துரைக்கப்பட்டது.

ஒன்றரை வயது பூர்த்தியாகாத பிள்ளைகள் பாலர் பள்ளிகளில் திரையைப் பயன்படுத்த அனுமதியில்லை.

உள்ளூரில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, திரைகளைப் பயன்படுத்துவது அவர்களின் நரம்பியல் அமைப்புக்கும் மூளை வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் காட்டுகிறது.

போதுமான உடல் செயல்பாடு இல்லாமல் போகிறது. அதனால், உடல்எடைக் குறியீட்டு எண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உடல் பருமன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழுகின்றன.


 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்