Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கவனக்குறைவாகச் செயல்பட்ட மகப்பேற்று மருத்துவருக்கு 12 மாதத் தற்காலிகத் தடை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கவனக்குறைவாகச் செயல்பட்ட மகப்பேற்று மருத்துவர் ஒருவருக்கு 12 மாதம் வேலை செய்யத் தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு டாக்டர் சென் யுன் ஹியன் கிறிஸ்டஃபர் (Dr Chen Yun Hian Christopher) என்ற அந்த மருத்துவரை, திருவாட்டி சி (C) என்ற பெண் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகச் சென்று பார்த்தார்.

டாக்டர் சென் அந்தப் பெண்ணுக்குச் செய்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான முறையில் தைத்து மூடாதது பின்னர் விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பெண் கருவுற்றார். அதன் பின்னர் கருக்கலைப்பு ஏற்பட்டது.

2016ஆம் ஆண்டுதான் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் அந்தப் பெண் புகார் கொடுத்தார்.

84 வயது டாக்டர் சென் அவரது வேலையில் கவனக்குறைவாக இருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கு விசாரணைக்கான செலவையும் வழக்கறிஞர்களின் செலவையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்