Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேலும் இரண்டு வகை Haagen-Dazs ஐஸ்கிரீமில் பூச்சிமருந்து அடையாளம்

வாசிப்புநேரம் -
மேலும் இரண்டு வகை Haagen-Dazs ஐஸ்கிரீமில் பூச்சிமருந்து அடையாளம்

Singapore Food Agency


Haagen-Dazs ஐஸ்கிரீமின் மேலும் இரண்டு வகைகளை மீட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு  உத்தரவிட்டுள்ளது. 

அவற்றில் ethylene oxide எனும்  பூச்சிமருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அந்த ரசாயனத்தை உணவில் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என்றும் அமைப்பு சொன்னது. 

Cookies and Cream, Belgian Chocolate ஆகிய ஐஸ்கிரீம் வகைகள் மீட்டுக்கொள்ளப்படும்.

  • Cookies and Cream (473 மில்லி லிட்டர் பொட்டலங்கள்) - 
  • காலாவதி: 27 மே 2023
  •  Belgian Chocolate (100 மில்லி லிட்டர் பொட்டலங்கள்) -
  • காலாவதி: 8 ஜூன் 2023

இரண்டு ஐஸ்கிரீம் வகைகளும் பிரான்ஸிலிருந்து தருவிக்கப்பட்டன. 

ரசாயனம் சிறிய அளவில் சேர்க்கப்படும் உணவைச் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி ஆபத்து இல்லையென்றாலும், அதை வெகுகாலம் உட்கொள்வதினால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அமைப்பு தெரிவித்தது.

கடந்த மாதம் ஏற்கெனவே Haagen-Dazs-இன் வெனிலா ஐஸ்கிரீமை மீட்டுக்கொள்ள உத்தரவு விடுக்கப்பட்டது.

ஐஸ் கிரீம் வகைகளை வாங்கியவர்களை அவற்றை உட்கொள்ளவேண்டாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவுறுத்தியது. 
 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்