Häagen-Dazs வெனிலா ஐஸ்-கிரீம் மீட்டுக்கொள்ள உத்தரவு - அதில் பூச்சிமருந்து இருக்கிறது

(SFA)
சிங்கப்பூர் உணவு அமைப்பு Häagen-Dazs நிறுவனத்தின் வெனிலா ஐஸ்கிரீமை மீட்டுக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
அதில் ethylene oxide எனப்படும் ஒருவிதப் பூச்சிமருந்து இருக்கிறது என்றும் அத்தகைய மருந்து உணவுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஐஸ்கிரீம் பிரான்ஸிலிருந்து இறக்குமதியானது.
- மீட்டுக்கொள்ளப்படும் Häagen-Dazs வெனிலா ஐஸ்கிரீம்:
காலாவதி: 4 ஜூலை 2022 முதல் 21 ஜூலை 2023 வரை
- மீட்டுக்கொள்ளப்படும் Häagen-Dazs Mini வகை வெனிலா ஐஸ்கிரீம்:
காலாவதி: 4 ஜூலை 2022 முதல் 21 ஜூலை 2023 வரை
பாதிக்கப்பட்ட ஐஸ்கிரீமைச் சாப்பிடுவதால் எந்தவித உடனடி ஆபத்தும் ஏற்படாது என்றபோதிலும் நீண்ட காலத்துக்கு அதை உட்கொள்வதால் உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
அதை உட்கொண்டவர்களுக்கு ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையை நாடும்படி அது கேட்டுக்கொண்டது.