புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்குப் புது நிபந்தனை
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் சிங்கப்பூரர்கள் அடுத்த ஆண்டு முதல் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
சவுதி அரேபியா அந்தப் புதிய நிபந்தனையை விதித்திருக்கிறது.
இதய நோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பெரிய நோய் இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழைத் தந்தால்தான் பயண விசா பெற முடியும்.
வரும் நவம்பர் 21ஆம் தேதிக்குள் அவர்கள் மருத்துவரிடம் அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
மூத்தவர்களுக்கு ஆதரவு நல்கப்படும்.
தகுதிபெறும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இறுதித் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும் என்று முயிஸ் எனப்படும் இஸ்லாமியச் சமய மன்றம் தெரிவித்தது.
எதிர்காலத்தில் இந்த அணுகுமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டு, திருத்தங்கள் செய்யப்படலாம் என்று மன்றம் கூறியது.
உடல் நலக் காரணத்தால் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள், குணம் அடையும்வரை பயணத்தைத் தள்ளிவைக்கலாம்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.