Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் ஹலிமாவுக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -
அதிபர் ஹலிமாவுக்குக் கிருமித்தொற்று

(கோப்புப் படம்: TODAY)

அதிபர் ஹலிமா யாக்கோபுக்குக் கோவிட் நோய் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதுகுறித்து அவரது Facebook பக்கத்தில் தகவல் பகிரப்பட்டது.

சளிக்காய்ச்சல் போலவே தமக்கு மிதமான அறிகுறிகள் இருப்பதாக அவர் சொன்னார்.

நல்லவேளையாக இரண்டு தடுப்பூசிகளையும் Booster எனும் கூடுதல் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுவிட்டதாக அதிபர் கூறினார்.

விரைவில் குணமடைய அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னையும் (Tan Chuan Jin) கொரோனா கிருமி தொற்றியுள்ளது.

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன் பரிசோதனை மேற்கொண்டபோது கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

அண்மையில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்டுக்கும் (Heng Swee Keat) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லிக்கும்(Masagos Zulkifli) COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa