Skip to main content
பிள்ளைகளுக்குத் துணைப்பாட வகுப்பு, வழிகாட்டித் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பிள்ளைகளுக்குத் துணைப்பாட வகுப்பு, வழிகாட்டித் திட்டம் - வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி புதுமுகம் ஹமிது

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சி, வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிக்கான அணியை இன்று அறிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் புதுமுகமான 39 வயது மருத்துவர் ஹமிது ரசாக் (Hamid Razak).

ஈராண்டாக ஜூரோங் ஸ்பிரிங் (Jurong Spring) வட்டாரத்தில் உள்ள இந்தியர்களைச் சந்தித்து வந்ததாகவும் அவர்களில் சிலர் நிதிச்சிக்கலைச் சந்திப்பதாகவும் அவர் சொன்னார்.

தற்போது தேவையுடையோருக்கு மாதந்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகத் திரு ஹமிது 'செய்தி'யிடம் சொன்னார்.

அதோடு வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த பாலர்பள்ளிப் பிள்ளைகளின் கல்வியைக் கருத்தில்கொண்டு இரவுநேரத்தில் சமூக மன்றங்களில் அவர்களுக்கு இலவசமாகத் துணைப்பாடம் நடத்தப்படுகிறது. அங்கு கதைநேரமும் நடத்தப்படுகிறது என்றார் திரு ஹமிது.

அதுபோன்ற பிள்ளைகளுக்கு வழிகாட்டித் திட்டமும் நடப்பில் உள்ளது. அத்திட்டத்தின்மூலம் வாழ்க்கையில் சிறந்து விளங்குவோர் சமூகத்திற்குத் திருப்பிக்கொடுக்கும் வகையில் இளையர்களுக்கு ஊக்கமளிக்கின்றனர்.

வசதி குறைந்த பின்னணிகளைச் சேர்ந்த பிள்ளைகளைக் கைதூக்கிவிடுவது எப்படி?

இவற்றைக் கையாள என்னென்ன திட்டங்களை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள்?

'செய்தி' நிருபர்கள் முன்வைத்த கேள்விகளுக்குத் திரு ஹமிது விடையளித்தார்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்