ஹன்ட்டாவைரஸ் பாதிப்புக்குள்ளான சொகுசுக்கப்பலில் சிங்கப்பூர்வாசிகள் இருவர் இருந்தனர்
வாசிப்புநேரம் -
(படம்: AFP)
ஹன்ட்டாவைரஸ் பாதிப்புக்குள்ளான சொகுசுக்கப்பலில் சிங்கப்பூர்வாசிகள் இருவர் இருந்தனர் என்று தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இருவரும் தற்போது தேசிய தொற்றுநோய் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கிருமி பரவியுள்ளதா என்பது பரிசோதிக்கப்படுகிறது.
பரிசோதனை முடிவுகள் இன்னும் தயாராகவில்லை.
ஒருவருக்கு சளி மட்டும் இருப்பதாகவும் மற்றபடி அவர் நலமாக இருப்பதாகவும் அமைப்பு கூறியது.
இன்னொருவரிடம் எந்த அறிகுறியும் இல்லை.
சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு ஹன்ட்டாவைரஸ் பரவும் அபாயம் தற்போது குறைவு என்று அமைப்பு சொன்னது.
அந்த இருவரும் பாதிக்கப்பட்ட MV Hondius கப்பலில் இருந்ததாக இம்மாதம் (மே) 4, 5 தேதிகளில் தகவல் கிடைத்தது.
அந்தக் கப்பல் அர்ஜென்டினாவின் உசுவையா (Ushuaia) துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 1ஆம் தேதி புறப்பட்டது.
முதலாமவர் 67 வயதுச் சிங்கப்பூரர் மே 2ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார்.
இரண்டாமவர் 65 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி நேற்று (6 மே) சிங்கப்பூர் வந்தார்.
இருவரும் ஏப்ரல் 25ஆம் தேதி ஹன்ட்டாவைரஸ் உறுதிசெய்யப்பட்டவருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர்.
அவர் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார்.
சிங்கப்பூர்வாசிகள் இருவருக்கும் ஹன்ட்டாவைரஸ் இல்லை என உறுதியானாலும் அவர்கள் 30 நாளுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

ஆதாரம் : CNA