Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குணப்படுத்துவதற்கு அரிதான நோய்களுக்குரிய சிகிச்சை முறைகளை ஆராயும் புதிய நிலையம் திறப்பு

வாசிப்புநேரம் -

குணப்படுத்துவதற்கு அரிதான புற்றுநோய் போன்ற நோய்களுக்குரிய சிகிச்சை முறைகளை ஆராயும் புதிய உயிர் மருத்துவ ஆய்வு நிலையம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

40,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அந்த ஆய்வு நிலையம், பல மில்லியன் வெள்ளி செலவில் நிறுவப்பட்டுள்ளது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) ஆய்வு நிலையத்தின் அதிகாரபூர்வத் திறப்புவிழாவில் பங்கேற்றார்.

Hummingbird Bioscience என்பது ஆய்வு நிலையத்தின் பெயர்.

புற்றுநோய்களைக் குணப்படுத்தும் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் இங்கே மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன.

புதிய நிறுவனமான Hummingbird, சென்ற ஆண்டு 125 மில்லியன் டாலர் நிதி ஆதரவைப் பெற்றது.

சிங்கப்பூர், இதுபோன்ற உயிர் மருத்துவ நிலையங்களை அதிகம் ஈர்த்துவருவதாகத் திரு. ஹெங் கூறினார்.

உயிர் மருத்துவத் துறை, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 விழுக்காட்டுக்குப் பங்கு வகிக்கிறது.

சென்ற ஆண்டு அது, 25,000க்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பளித்ததைத் திரு. ஹெங் சுட்டினார்.

 அரசாங்கம், தொடர்ந்து அந்தத் துறையில் முதலீடு செய்து திறனாளர்களை ஈர்க்கும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்