Skip to main content
உணவங்காடிகளில் தீப்பாதுகாப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உணவங்காடிகளில் தீப்பாதுகாப்பு - என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தீப்பற்றாமல் பார்த்துக்கொள்ளவும் தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உணவங்காடிகளுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுவதாய் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார். 

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, தேசியச் சுற்றுப்புற அமைப்புடனும் தேசியத் தீ, அவசர நிலை தயார்நிலை மன்றத்துடனும் இணைந்து அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.  

தீப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளையும் திரு சண்முகம் வலியுறுத்தினார். 

👩‍🚒 200 பேருக்கு மேல் இருக்கக் கூடிய உணவங்காடி நிலையங்களிலும், பொதுக் கட்டடங்களிலும் அவசரகாலத் திட்டம் இருக்கவேண்டும்.  

👩‍🚒 தீ அவசர நிலையின்போது கட்டடத்தை விட்டு வெளியேறும் பயிற்சிகளை ஆண்டுக்குக் குறைந்தது ஒரு முறையாவது நடத்த வேண்டும். 

👩‍🚒 சமையலுக்குத் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (liquefied petroleum gas) பயன்படுத்தவேண்டும்; உணவு விடுதிகளில் புகை வெளியேறும் குழாய்களைச் சுத்தம் செய்யவேண்டும். 

குடிமைத் தற்காப்புப் படை வழக்கமான சோதனைகளையும் செய்கிறது; முன்னறிவிப்பின்றியும் உணவங்காடி நிலையங்களைச் சோதிக்கிறது. 

தீப்பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தாத உரிமையாளர்கள் அல்லது வாடகைதாரர்களுக்கு $10,000 வரை அபராதமோ ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.  

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்