Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

உணவங்காடிகளில் மேசையில் சிந்தும் உணவை எடுத்துப்போடும் பழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

வாசிப்புநேரம் -
உணவங்காடிக் கடை மேசைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் அனைவருமே விரும்புவோம்.

உணவு இடங்களின் சுத்தத்தைப் பொறுத்தே அங்கு உண்ணலாமா வேண்டாமா என்பதை நம்மில் பலர் தீர்மானிப்பதுண்டு.

உணவுத் தட்டுகளை எடுத்து வைக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டாலும் மேசையில் சிந்தும் உணவை எடுத்துப்போடும் பழக்கம் நம்மில் எத்தனைப் பேருக்கு இருக்கிறது?

உணவுக்கடைகளில் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும்போது நமக்கு அடுத்து வருபவரை கருத்தில்கொண்டு மேசையை சுத்தமாக விட்டுச்செல்வது சிறப்பு என்கிறது தேசிய சுற்றுப்புற அமைப்பான NEA.

குறிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகமாக வரத்தொடங்கும் உச்ச நேரங்களில் நாம் அமர்ந்த மேசையை சுத்தமாக விட்டுச்செல்வதன் வாயிலாக பணியாளர்களின் சுமையையும் குறைக்க உதவமுடியும்.

அது குறித்து மக்கள் என்ன நினைக்கின்றனர்? துப்புரவாளர்களும், கடைக்காரர்களும் சொல்வது என்ன? ஆராய்ந்தது 'செய்தி'.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்