Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

அரிய கலைப்பொருள்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன - பாகம் 1

வாசிப்புநேரம் -

அரிய கலைப்பொருள்கள்...

அரும்பொருளகம் சென்றால் நம் கண்ணில் படுகின்றன...

'தொடாதீர்கள்' எனப் பொக்கிஷமாய்ப் பாதுகாக்கப்படும் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு சுவையான கதை உண்டு...

ஒரு பொருள் எப்போது அரும்பொருளகக் கலைப்பொருளாய் மாறுகிறது?

ஜூரோங் துறைமுகத்தில் உள்ள சிங்கப்பூர் மரபுடைமைப் பாதுகாப்பு நிலையத்தில் பல கலைப்பொருள்கள் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளன.

6 மாடிக் கட்டடத்தில் சுமார் 260 ஆயிரத்துக்கும் அதிகமான கலைப்பொருள்கள் உள்ளன.

காகிதம், ஓவியம், பொருள், துணி என 4 பிரிவுகள்.

காலவோட்டம், சுற்றுச்சூழல், அலட்சியம் எனச் சில காரணங்களால் மோசமான நிலையில் அவை இங்கு வந்து சேரும். அவற்றை முறையாக வகைப்படுத்துகின்றனர் கலைப்பொருள் பராமரிப்பாளர்கள்.

அவர்களின் கருத்துக்களை செய்தி நிருபர் ஷரளா தேவி கோபால் கேட்டறிந்தார்.

<p>(படம்: Pixabay)&nbsp;</p>

விக்னேஸ் - கலைப்பொருள் பாதுகாப்புப் பணியாளர் (காகிதம்)

அண்மையில் நடந்த சீக்கியர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை சரிசெய்ததாகத் தெரிவித்தார்.

நிலையத்திற்கு வந்தபோது புகைப்படத்தில் சில கிழிசல்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

அதோடு புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதன் மூலம் புகைப்படத்தின் வயதையும் கணிக்க முடியும் எனவும் கூறினார்.

சீக்கியர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் Gelatin Silver முறை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மிகப் பிரபலமாக இருந்தது.

இதை வைத்துப் பார்க்கும்போது புகைப்படத்தின் வயது சுமார் 80 முதல் 90 வயது இருக்கலாம் எனக் கூறினார்.

வெப்பநிலை, ஈரப்பதம், பராமரிப்பு, இடப்பற்றாக்குறை, பொருத்தமான திறன்கொண்ட ஊழியர்களைத் தேடிப்பிடிப்பதில் சிக்கல் என ஏகப்பட்ட சவால்களை நிலையம் எதிர்நோக்குகிறது.

இருந்தாலும் செய்தாக வேண்டும். எப்படி?

தெரிந்துகொள்ளலாம் பாகம் 2-ல்...

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்