Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"பிள்ளைகளின் வளர்ச்சிக்கு விளையாட்டு இடங்கள் வடிவமைக்கப்படும்" - HDB

வாசிப்புநேரம் -
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB) அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் விளையாட்டு இடக் கட்டமைப்பை அறிமுகம் செய்யவிருக்கிறது.

உடல்நலன், சமூக ஈடுபாடு, கற்பனைத் திறன் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் அது உருவாக்கப்படும்.

கட்டமைப்பின் முன்னோடித் திட்டமாக, அத்தகைய விளையாட்டு இடங்கள் மவுண்ட் பிளசண்ட் கிரஸ்ட்டில் (Mount Pleasant Crest) அறிமுகப்படுத்தப்படும்.

பிள்ளைகளின் வயதிற்கேற்ப அம்சங்கள் வடிவமைக்கப்படும்.

உதாரணத்திற்கு 2 முதல் 5 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு அவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டும் வகையிலான விளையாட்டுகள் அமைக்கப்படும்.

5 முதல் 12 வயதுள்ள பிள்ளைகள் உடலைப் பலப்படுத்தும் விளையாட்டுகளிலும் குழுவாக விளையாடுவதிலும் ஈடுபாடு காட்டும்படி ஊக்குவிக்கப்படுவர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்