ஜூரோங் வட்டார ரயில் பாதை - முதற்கட்டம் 2028 மத்தியில் திறக்கப்படும்
வாசிப்புநேரம் -
ஜூரோங் வட்டாரப் பாதையின் முதற்கட்ட MRT நிலையங்கள் 6 மாதத் தாமதத்துக்குப் பிறகு 2028ஆம் ஆண்டு நடுப்பகுதியில் திறக்கப்படவுள்ளன.
இதற்கு முன்னதாக அவை அடுத்த ஆண்டு இறுதியில் திறக்க இலக்கு கொண்டிருந்ததாகத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் Jeffrey Siow நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பணிகளைப் பாதுகாப்பான முறையில் முடிப்பதை உறுதிசெய்யக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாக அவர் போக்குவரத்து அமைச்சின் செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில் பகிர்ந்துகொண்டார்.
புதிய நிலையங்களான தெங்கா செண்ட்ரலுக்கும் (Tengah Central) சுவா சூ காங் வெஸ்ட்டுக்கும் (Choa Chu Kang West) இடையே இன்னொரு நிலையம் அமைக்கப்படும் என்று திரு சியாவ் தெரிவித்தார்.
அது 2030ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புன் லே (Boon Lay), சுவா சூ காங் (Choa Chu Kang) முனையங்கள் உட்பட ஜூரோங் வட்டாரப் பாதையின் முதற்கட்டத்தில் 10 ரயில் நிலையங்கள் திறக்கப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi