Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"அன்றாட நாயகர்களை மதித்து போற்றுவோம்" தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் இயக்கம்

வாசிப்புநேரம் -
 "அன்றாட நாயகர்களை மதித்து போற்றுவோம்" தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் இயக்கம்

படம்: NTUC

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.


தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் படிப்படியாகச் சம்பள உயர்வு பெறும் ஊழியர்களுக்குக் கூடுதல் அங்கீகாரம் வழங்கும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது.

சிங்கப்பூரைச் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் கைகொடுக்கும் பல்லாயிரம் குறைந்த சம்பள ஊழியர்களின் பணிகளைக் கெளரவிப்பது நோக்கம்.

சிங்கப்பூரர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

பெடோக்கில் நடைபெற்ற இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங்கும் (Melvin Yong), மனித வளத் துணையமைச்சர் தினேஷ் வாசுதாஸும் (Dinesh Vasu Dash) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

துப்புரவு, பாதுகாப்பு, தோட்டக்கலை, உணவுச் சேவை உள்ளிட்ட எட்டுத் துறைகளைச் சேர்ந்த குறைந்த சம்பள ஊழியர்களை மதித்து, அன்றாட நாயகர்களாக அவர்களைப் போற்ற வேண்டும் என்று இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்