அவதூறு வழக்கு - UOBக்கு $125,000 இழப்பீடு
This audio is generated by an AI tool.
UOB வங்கி தொடுத்த அவதூறு வழக்கில் திரு டெரி சியு யுவான் செனும் (Terry Xu Yuan Chen), The Online Citizen (TOC) இணையத்தளத்தை நிர்வகிக்கும் Miao Yi Infotech நிறுவனமும் 125,000 வெள்ளி இழப்பீட்டுத் தொகை கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி, வாடிக்கையாளர்களை மிரட்டுதல் ஆகியவற்றில் UOB ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டும் செய்திகளை TOC சென்ற ஆண்டு மார்ச் 27, 29ஆம் தேதிகளில் வெளியிட்டது.
அவற்றுக்கு இணையவாசிகள் கடுமையான கருத்துகளைப் பகிர்ந்ததால் வங்கியின் நற்பெயர் பாதிக்கப்பட்டதாக UOB, திரு சியு மீது அவதூறு வழக்குத் தொடுத்தது.
நீதிமன்றம் திரு சியுவும் Miao Yi Infotech நிறுவனமும் UOB வங்கி மீது அவதூறு பரப்பியதை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.
இழப்பீட்டுத் தொகையைத் தவிர்த்து மேற்கொண்டு 18,000 வெள்ளி கட்டவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.