Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"மனநலம் காக்க மனம்விட்டுப் பேசுங்கள்" - சுகாதாரத் தூதர் விருது பெற்றவர்கள்

வாசிப்புநேரம் -
திருவாட்டி பெட்டி ஹோ (Patti Ho)....இவருக்கு வயது 81.

உடலளவிலும் உள்ளத்தளவிலும் இன்னும் துடிப்புடன் செயல்படுகிறார்.

குறிப்பாகச் சமூகத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கற்றுக்கொடுப்பதில் தம்மை அர்ப்பணித்து வருகிறார்.

இன்று நடைபெற்ற சிங்கப்பூர் HEALTH விருது நிகழ்வில் விருது பெற்ற 125 பேரில் திருவாட்டி ஹோவும் ஒருவர்.
 
(படம்: Health Promotion Board)
அவரின் சேவைகளைப் பாராட்டி Health Ambassador எனும் சுகாதாரத் தூதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

திருவாட்டி ஹோ, மருத்துவமனைகள், Active Ageing Centres எனப்படும் மூத்தோர் துடிப்பாக முதுமையடைய உதவும் நிலையங்கள் ஆகியவற்றுக்குச் சென்று "7 Sit Down and 7 Easy Exercises" எனும் உடற்பயிற்சியை நடத்தி வருகிறார்.

ஒருவர் மற்றவரோடு மனம்விட்டுப் பேசிப் பழகும்போது மனநலம் சிறப்பாக இருக்கும் என்பது திருவாட்டி ஹோவின் நம்பிக்கை.

உடற்பயிற்சி நேரத்தின்போது தாம் இயற்றிய பாடல்களைப் பங்கேற்பாளர்களுக்குச் சொல்லியும் கொடுக்கிறார் இவர்.

சமச்சீரான உணவு, போதிய தூக்கம், தூய்மையைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.

தமது நடவடிக்கைகள் மற்றவர்களுக்குக் கொண்டுவரும் மாற்றங்களைக் காண்பதே திருப்தி என்கிறார் இவர்.
 
(படம்: Health Promotion Board)
திருவாட்டி ஹோவைப் போல திருவாட்டி வெரோன் டான்னுக்கும் (Veronne Tan) சுகாதாரத் தூதர் விருது வழங்கப்பட்டது.

63 வயதாகும் திருவாட்டி டான் மூத்தோருக்கான யோகா வகுப்புகளை நடத்தி வருகிறார்.

"7 Sit Down and 7 Easy Exercises" எனும் எளிய உடற்பயிற்சிகளுக்கான பயிற்றுநராகவும் இருக்கிறார்.

மருத்துவமனைகளுக்குச் சென்று அவர் இந்த உடற்பயிற்சிகளைக் கற்றுத்தருகிறார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்