Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீ சூன் குழுத்தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் சுகாதார விழா

நீ சூன் குழுத்தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழு முதல்முறையாக சுகாதார விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வாசிப்புநேரம் -

நீ சூன் குழுத்தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழு முதல்முறையாக சுகாதார விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

யீஷுன் ஸ்டிரீட் 81இல் தற்போது நடைபெறும் விழாவில் சுகாதார உரைகள், மருத்துவப் பரிசோதனைகள், விளையாட்டுகள் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சட்ட, உள்துறை, அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் நீ சூன் குழுத் தொகுதியின் அடித்தள ஆலோசகர்களான இணைப் பேராசிரியர் ஃபார்சால் இப்ராஹிம் (Faisal Ibrahim), டாக்டர் லீ பீ வா (Lee Bee Wah), திரு. ஹென்றி குவெக் (Henry Kwek), திரு. லுவிஸ் இங் (Louis Ng) ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

MPC@Khatib விளையாட்டுத் திடலில் இன்று (மார்ச் 3) காலை 8 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி பிற்பகல் 1 மணி அளவில் நிறைவுபெறும்.

சுமார் ஆயிரம் பேர் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைவர் என்று எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்