Skip to main content
சத்தமின்றி இளையர்களை அச்சுறுத்தும் Kpods
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சத்தமின்றி இளையர்களை அச்சுறுத்தும் Kpods - இதன் ஆபத்து?

வாசிப்புநேரம் -
சத்தமின்றி இளையர்களை அச்சுறுத்தும் Kpods - இதன் ஆபத்து?

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 17 Aug 2025 08:46PM புதுப்பிப்பு : 19 Aug 2025 02:19PM
Kpods...

சிங்கப்பூரில் இளையர்களைச் சத்தமின்றி அச்சுறுத்தி வரும் புதிய மின் சிகரெட்.

Kpods பற்றித் தெரியுமா என்று 'செய்தி' நேயர்களிடம் Instagram பக்கத்தில் கேட்கப்பட்டது.

அதன் முடிவுகள்...
Related article image
அதைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை.

பார்ப்பதற்கு வழக்கமான vape மின் சிகரெட்டுகளைப் போல் இருக்கும்.

ஆனால் Kpodsஇல் போதை மருந்துகள் கலக்கப்பட்டிருக்கும்.

Telegram உள்ளிட்ட சில சமூக ஊடகங்களில் இவை சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன.

இதயத்தைப் பாதித்து மரணத்தை விளைவிக்கக்கூடிய Kpodsஇல் என்ன இருக்கிறது?

விவரிக்கிறார் சிங்கப்பூர் இதய நல நிலையத்தின் தலைவர் பேராசிரியர் டான் ஹுவாய் சீம் (Tan Huay Cheem).

Vape மின் சிகரெட்டுகளில் nicotine என்ற ஆபத்தான கலவை இருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் KPods மின் சிகரெட்டில் செயற்கை கஞ்சா (cannabinoids), கெட்டமைன் (ketamine), methamphetamine, மயக்க மருந்துகள் உள்ளிட்ட அறிந்திராத கலவைகள் இருக்கும்.

இது மயக்கம், வலிப்பு, நினைவிழப்பு, மோசமான இதயப் பிரச்சினைகளை உண்டாக்கக்கூடியது.

மூளைக்கும் மனத்துக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும் தன்மை Kpods மின் சிகரெட்டுக்கு உள்ளது.

Kpods எவ்வாறு இதயத்தைப் பாதிக்கிறது?

KPods கலவைகள் இதய மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை.

Ketamine (கெட்டமைன்), etomidate மயக்க மருந்துகள்:
- இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்து சுவாசக்கோளாற்றை ஏற்படுத்தக்கூடியவை.

Methamphetamine:
- இதயத்தைச் செயலிழக்கச் செய்யும். பக்கவாதத்தையும் கடுமையான மனநலச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

செயற்கை கஞ்சா (Synthetic cannabinoids):
- நரம்பு மண்டலத்தைப் பாதித்து இதயப் படபடப்பை அதிகரிக்கும். நெஞ்சு வலி, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் மாரடைப்பு, திடீர் நெஞ்சு வலியை உண்டாக்கும்.

KPods மின் சிகரெட்டுகள் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவற்றின் கலவைகள் மாறுபடலாம்.

தொடர்ந்து பயன்படுத்தினால் நீண்ட காலச் சிக்கல்கள் வரலாம்.... மீளவே முடியாது என்ற நிலையும் ஏற்படலாம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்