Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆண்டிறுதி விடுமுறையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம்... உச்ச நேரத்தைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கு ஆலோசனை

வாசிப்புநேரம் -
ஆண்டிறுதி விடுமுறையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம்... உச்ச நேரத்தைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கு ஆலோசனை

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

ஆண்டிறுதிப் பள்ளி விடுமுறைக் காலத்தில் பயணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தும் பயணிகள், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இயன்றவரை உச்ச நேரத்தில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைசாவடிகளில் தற்போதைய போக்குவரத்து, COVID-19 கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த நிலையில் சுமார் 80 விழுக்காட்டுக்குத் திரும்பியிருப்பதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் இன்று (15 நவம்பர்) தெரிவித்தது.

இம்மாதம் (நவம்பர் 2022) 4ஆம் தேதிக்கும் 6ஆம் தேதிக்கும் இடையில் இரு சோதனைச்சாவடிகளையும் சுமார் 1 மில்லியன் பயணிகள் கடந்திருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

இந்நிலையில் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாகலாம் என ஆணையம் குறிப்பிட்டது.

ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பள்ளி இறுதி விடுமுறைக் காலத்தில், நிலச் சோதனைச்சாவடிகளின் வழி சென்றோர் சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர் என்பதையும் ஆணையம் குறிப்பிட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, பயணத்தை விவேகமான முறையில் திட்டமிடுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.

மேல் விவரங்களுக்கு: https://www.ica.gov.sg/
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்