Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வர்த்தகங்கள் பசுமை நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்கங்கள் உதவலாம்: மூத்த துணையமைச்சர் ஏமி கோர்

வாசிப்புநேரம் -
வர்த்தகங்கள் பசுமை நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்கங்கள் உதவலாம்: மூத்த துணையமைச்சர் ஏமி கோர்

(படம்: CNA/Marcus Mark Ramos)

வர்த்தகங்கள், பசுமை நடவடிக்கைகளில் ஈடுபட நம்பகமான ESG என்கிற சுற்றுச்சூழல், சமுதாய, ஆட்சிமுறைத் தகவல்களும் ஒத்திசைவான அறிக்கைத் தரநிலைகளும் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலகத் திடக்கழிவுச் சங்க உலக மாநாட்டில் பேசப்பட்டது.

நிறுவனங்கள் சரியான ESG புள்ளி விவரங்களைப் பெறுவதில் அரசாங்கங்கள் உதவலாம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் (Amy Khor) கூறினார்.

அது வர்த்தகம், முதலீடு தொடர்பான முடிவுகளைப் புரிந்துகொண்டு எடுக்க நிறுவனங்களுக்கு உதவும் என்று அவர் சொன்னார்.

ESGஐப் பொறுத்தவரை நிறுவனங்கள் பல்வேறு கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதால் அவற்றை ஒப்பிட முடியவில்லை.

அதனால்தான் ஒத்திசைவான தரநிலைகள் முக்கியம் என்று டாக்டர் கோர் கூறினார்.

இதற்கிடையே நிறுவனங்கள் பசுமை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக் கரியமில வாயு வரி, மானியம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa