மூடப்பட்ட உணவு விநியோக நிறுவனத்தின் ஓட்டுநர்களுக்கு எத்தகைய உதவி வழங்கப்படுகிறது?
This audio is generated by an AI tool.
அண்மையில் சந்தையிலிருந்து வெளியேறிய உணவு விநியோக நிறுவனங்கள் குறித்த கேள்விகளுக்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) பதிலளித்தார்.
இணையத்தளச் சேவை ஊழியர்களின் (Platform Workers) வேலை வேறுபட்டதாக இருக்கிறது; பொதுவாக மற்ற நிறுவனங்கள் மூடும்போது ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு இவர்களுக்குப் பொருந்தாது என்றார் டாக்டர் டான்.
தங்கள் வேலையை நினைத்த நேரத்திற்குச் செய்ய முடிவதால் வேலை நிறுத்தத்திற்கான முன்னறிவிப்பு விதிமுறைகளும் இவர்களுக்குப் பொருந்தாது.
இணையத்தளச் சேவை ஊழியர்கள் மற்ற தள சேவை வழங்கும் முதலாளிகளை அணுகலாம் அல்லது சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, e2i, வேலைச் சங்கங்களை அணுகி சேவைகளையும் பயிற்சித் திட்டங்களையும் பெறலாம்.
அண்மையில் ஏற்பட்ட உணவு விநியோக நிறுவனத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, e2i ஆகியவை பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆதரவும் தொழில் ஆலோசனையும் வழங்கின.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எந்த வேலையில் இருந்தாலும், நிதியுதவி தேவைப்பட்டால் தங்கள் சமூகச் சேவை அலுவலகத்தை (Social Service Office) நாடலாம்.