சம்பளத்தைப் பெறமுடியாதவர்களுக்கு என்ன தீர்வு?
This audio is generated by an AI tool.
சம்பளத்தை மீட்பதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்கும் பணியாளர்களின் பிரச்சினைகள் பற்றி மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) விவரமளித்திருக்கிறார்.
நீதிமன்ற நடவடிக்கை தேவைப்படுவதால் பணியாளர்கள் சிலர் தங்கள் சம்பளத்தை மீட்க முடியாத நிலையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டாக்டர் டான் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
2024 ஆண்டின் வேலை நியமன தரநிலைகள் அறிக்கையின்படி (Employment Standards Report)
- 94 விழுக்காட்டினர் தங்கள் சம்பளத்தை முழுமையாக மீட்டனர்.
- 4 விழுக்காட்டினர் பாதுகாப்புப் பத்திரக் காப்பீட்டாளர்கள் (security bond insurers), முதன்மை ஒப்பந்ததாரர்கள் மூலம் பகுதியளவு சம்பளத்தை மீட்டனர் அல்லது நிதியுதவி மூலம் உதவி பெற்றனர்.
- 2 விழுக்காட்டினர் தங்கள் சம்பளத்தை மீட்கவில்லை (பெரும்பாலும் அதிக வருமானம் பெறுபவர்கள்) குறிப்பிட்ட தேதிக்குள் தொழிலாளருக்குப் பணம் கிடைக்கவில்லை என்றால் சர்ச்சை நிர்வாகத்திற்கான முத்தரப்புக் கூட்டணியின் உதவியை நாடலாம் என்று டாக்டர் டான் சொன்னார்.
கூட்டணி முதலாளியிடம் பணம் செலுத்தும் கடமை குறித்துப் பேசும்.
நீதிமன்ற உத்தரவைப் பெற, நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் செயல்முறை குறித்து தொழிலாளருக்கு ஆலோசனை வழங்கும். பிரச்சினை தீவிரமானால், வேலை நியமனச் சட்டத்தின் கீழ் மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.
சம்பளம் கொடுக்காத முதலாளிகளுக்குத் தண்டனையாக எச்சரிக்கைகள் விடுக்கப்படலாம்; வேலை அனுமதி அட்டைகளை விண்ணப்பிப்பதிலிருந்து தடை விதிக்கப்படலாம்; நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதலாளிகளுக்கு...
$15,000 வரை அபராதமோ ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு $30,000 வரை அபராதமோ 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.