Skip to main content
சிங்கப்பூரர்கள் தாயகம் திரும்புவதற்கு உதவ முயற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் தாயகம் திரும்புவதற்கு உதவ முயற்சி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருக்கும் சிங்கப்பூர்த் தூதரகம் பஹ்ரேனில் சிக்கியிருக்கும் சிங்கப்பூரர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முனைகிறது.

அது பேருந்துகள்வழி  சிங்கப்பூரர்களை ரியாத்திற்கு அழைத்துவருவது குறித்துப் பரிசீலிக்கிறது.

சேவையில் இருக்கும் அனைத்துலக விமானங்கள்வழி அவர்கள் நாடு திரும்ப அது உதவியாக இருக்கும் என்று தூதரகம் சொல்லிற்று.

அதற்கான தேவை குறித்து ஆராய்வதாகத் தூதரகம் கூறியது.

ஆர்வம் இருக்கும் சிங்கப்பூரர்கள் அதற்குப் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருக்கும் சிங்கப்பூரர்கள் தாயகம் திரும்புவதற்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஒரு வழியை எடுத்துரைத்தது.  

அவர்கள் மஸ்கட்டிலிருந்து (Muscat) ஓமான் ஏர் (Oman Air) வழி இடைவழிப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் பின்னர் சிங்கப்பூருக்கு இன்னொரு விமானச் சேவையைப் பயன்படுத்தலாம் என்றும் வெளியுறவு அமைச்சு சொன்னது.

அதுகுறித்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்