SIT வேந்தர் ஹெங் சுவீ கியட்
(படம்: SIT)
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் (Heng Swee Keat), சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத்தின் (SIT) முதல் வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தொழில்நுட்பக் கழகம் அதனைத் தெரிவித்தது.
நியமனம் திங்கட்கிழமை (1 ஜூன்) நடப்புக்கு வந்தது.
பொறுப்பு ஐந்தாண்டுக் காலம்.
2031ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.
வேந்தராக, திரு ஹெங் கழகத்தின் ஆக உயரிய சடங்குபூர்வ பதவி வகிப்பவராகவும் தூதராகவும் செயல்படுவார்.
பல்கலையின் முக்கிய நிகழ்வுகளுக்குத் திரு ஹெங் தலைமையேற்பார்.
சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத்தின் பங்காளித்துவங்களை வலுப்படுத்தவும் தொழிலியல், கொடை ஈடுபாட்டை அதிகரிக்கவும் அவர் முனைவார்.
பல்கலையின் முதல் வேந்தராக நியமிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாகத் திரு ஹெங் குறிப்பிட்டார்.