Skip to main content
பரம்பரை தொடர்புடைய புற்றுநோய்ச் சோதனைக்குக் கட்டணக் கழிவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பரம்பரை தொடர்புடைய புற்றுநோய்ச் சோதனைக்குக் கட்டணக் கழிவு

வாசிப்புநேரம் -
பரம்பரை தொடர்புடைய புற்றுநோய்ச் சோதனைக்குக் கட்டணக் கழிவு

Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பரம்பரை சார்ந்த மார்பகப் புற்றுநோய், கருவகப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறிய உதவும் மரபணுச் சோதனைக்கு அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கட்டணக் கழிவு வழங்கப்படும். 

தகுதிபெறும் நோயாளிகள், சோதனைக்கான கட்டணத்தை MediSave மூலம் முழுமையாகச் செலுத்தலாம்.

சிங்கப்பூரின் மூன்று பொதுச் சுகாதாரக் குழுமங்களும் அந்தக் கழிவை வழங்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புற்றுநோய் அறிகுறி தென்படும் நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கும் மேம்பட்ட நிதியாதரவு வழங்கப்படும். 

பரம்பரை சார்ந்த மார்பகப் புற்றுநோய், கருவகப் புற்றுநோய் ஆகியவை தொடர்பான மரபணுப் பிறழ்வுகள் (gene mutations) கொண்டோரை முன்கூட்டியே அடையாளம் கண்பதன்மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

சிங்கப்பூரர்கள் 150 பேரில் சுமார் ஒருவருக்கு அதனுடன் தொடர்புடைய மரபணுப் பிறழ்வுகள் உள்ளன.

அத்தகைய மரபணுப் பிறழ்வுகள் ஒருவருக்கு மார்பக, கருவகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

நோய் வரும் முன்னரே காக்கும் அணுகுமுறையில் இது ஓர் அங்கம் என்று அமைச்சு கூறியது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்