Skip to main content
சிங்கப்பூர் 60
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் 60 - நாணயச் சாலையின் புதிய வெளியீடுகள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நாணயச் சாலை (The Singapore Mint) புதிய தொகுப்புகளை வெளியிடுகிறது.

கலாசாரப் பதக்கங்கள், புத்தக அடையாளக் குறிப்புகள், உருவச்சிலைகள் ஆகியவை இன்று அறிமுகம் கண்டன.

அவை இவ்வாண்டு நெடுகிலும் படிப்படியாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கலாசாரப் பதக்கங்கள் சாங்கி, ஜூரோங், தியோங் பாரு, தோ பாயோ, குவீன்ஸ்டவுன் ஆகிய 5 வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டாரங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

அந்த வட்டாரங்களைக் காட்டும் தங்க நிறப் புத்தக அடையாளக் குறிப்புகளும் வெளியிடப்படும்.

கலாசாரப் பதக்கங்களின் விலை 120 வெள்ளி.

குவீன்ஸ்டவுனைப் பிரதிபலிக்கும் பதக்கம் 100 வெள்ளிக்கு விற்கப்படும்.

புத்தக அடையாளக் குறிப்புகளின் விலை 15 வெள்ளி.

அழகழகான உருவச்சிலைகளையும் எதிர்பார்க்கலாம்.

மேல் விவரங்களுக்கு The Singapore Mint இணையப்பக்கத்தை நாடலாம்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்