Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிரடிச் சோதனைகள் - 2 சிங்கப்பூரர்கள் கைது

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிரடிச் சோதனைகள் - 2 சிங்கப்பூரர்கள் கைது

(படம்: CNB)

சிங்கப்பூரில் நேற்று (9 ஜனவரி) மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) நடத்திய இரண்டு அதிரடிச் சோதனைகளில் பெரிய அளவில் போதைப்பொருள்களும் ரொக்கமும் சிக்கின.

சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 254,000வெள்ளிக்கும் அதிகம் என்று கணிக்கப்பட்டது. சுமார் 1,200 போதைப்பொருள் புழங்கிகள் அவற்றை ஒரு வாரத்திற்குப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

அப்பர் கிராஸ் ஸ்ட்ரீட்டில் (Upper Cross Street) அதிரடிச் சோதனை

- சந்தேக நபர், அதிகாரிகளை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்பதால் அவர்கள் வல்லந்தமாக வீட்டுக்குள் நுழைய நேரிட்டது.

- 59 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

- 1,965 கிராம் போதைமிகு அபின் (heroin), 118 கிராம் ஐஸ் (‘Ice’), 2 மெத்தடோன் (methadone) போத்தல்கள், போதைப்பொருளைப் பயன்படுத்த உபயோகிக்கப்படும் பாத்திரங்கள், 32,378.26 வெள்ளி ரொக்கம், 1 டாலர் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
(படம்: CNB)
பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 71இல் அதிரடிச் சோதனை

- வீட்டில் 50 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

- 1,378 கிராம் கஞ்சா, போதைப்பொருளைப் பயன்படுத்த உபயோகிக்கப்படும் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

- 7,594 வெள்ளி, 292 மலேசிய ரிங்கிட், 3,786,000 இந்தோனேசிய ருப்பியா, 20 சவுதி ரியால், 690 எகிப்திய பவுண்டு ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் 15 கிராமுக்கும் மேல் diamorphine போதைமிகு அபின் அல்லது 500 கிராம் கஞ்சா கடத்தியதாக ஒருவர்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஒருவர் போதைப்பொருளைக் கடத்தியது நிரூபிக்கப்பட்டால் அதன் வழி அவருக்குக் கிடைத்த அனுகூலங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்