Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"2024இல் மேலும் பலர் சிங்கப்பூர்க் குடியுரிமை, நிரந்தரவாசத் தகுதி பெற்றனர்"

வாசிப்புநேரம் -
"2024இல் மேலும் பலர் சிங்கப்பூர்க் குடியுரிமை, நிரந்தரவாசத் தகுதி பெற்றனர்"

AFP/Roslan RAHMAN

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024) மேலும் பலர் சிங்கப்பூர்க் குடியுரிமை, நிரந்தரவாசத் தகுதி ஆகியவற்றைப் பெற்றுள்ளனர்.

அண்மை ஆண்டுகளில் அதிகரிக்கும் சுகாதாரப் பராமரிப்பின் தேவையைக் கருத்தில்கொண்டு மேலும் பல சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் குடியுரிமை, நிரந்தரவாசத் தகுதி ஆகியவற்றைப் பெற்றதாகத் துணைப்பிரதமர் கான் கிம் யோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருடன் ஒன்றுபடும் தன்மை, பங்களிப்பு, சிங்கப்பூருடன் இருக்கும் தொடர்பு ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு மேலும் பலருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என்றார் அவர்.

சிங்கப்பூர் பிணைப்புமிக்க சமுதாயமாகத் தொடர்ந்து இருக்கவும் அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் நல்ல இல்லமாக இருக்கவும் கவனமாகப் பரிசீலனை செய்த பின்னரே குடியுரிமை வழங்கப்படும் என்று திரு கான் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூ (He Ting Ru) எழுப்பிய கேள்விக்குத் திரு கான் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் சார்பில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்