Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவோருக்குக் கூடுதல் அபராதங்கள், குற்றப்புள்ளிகள்

வாசிப்புநேரம் -
அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவோருக்குக் கூடுதல் அபராதங்கள், குற்றப்புள்ளிகள்

(படம்: Facebook/Singapore Police Force)

சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவோருக்கு அடுத்த ஆண்டு (2026) தொடக்கத்திலிருந்து அதிக அபராதமும் குற்றப் புள்ளிகளும் விதிக்கப்படும்.

சொங் பாங்கில் (Chong Pang) சாலைப் பாதுகாப்பு நாளைத் தொடங்கிவைத்தபோது உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் அந்தத் தகவலைக் கூறினார்.

அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் சென்ற ஆண்டு 7,200விபத்துகள் நடந்தன. அதில் 142 பேர் மாண்டனர். 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 44 விழுக்காடு அதிகம்.

சென்ற ஆண்டு (2024) சுமார் 192,000 வேகக் கட்டுப்பாடு மீறல்கள் கண்டறியப்பட்டன. அது பத்து ஆண்டுகளில் இல்லாத உயர்வு.

அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவோருக்கான தண்டனைகள் குறித்த கூடுதல் விவரம் பின்னர் வெளியிடப்படும்.

சாலைப் பாதுகாப்பை முக்கியமாகக் கருதும் சமுதாயத்தை வளர்ப்பது அவசியம் என்றும் வாகனங்களை ஓட்டும்போது மக்கள் கவனமாகச் செயல்படவேண்டும் என்றும் அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்