கேலாங் செராய் ரமதான் சந்தையில் காலியாக இருக்கும் 20 விழுக்காட்டுக் கடை இடங்கள்

(கோப்புப் படம்: TODAY/Wee Teck Hian)
கேலாங் செராய் ரமதான் சந்தையில் 20 விழுக்காட்டுக் கடை இடங்கள் காலியாக உள்ளன.
மற்ற சந்தைகளிலிருந்து போட்டி அதிகரித்திருப்பதாகச் சொல்கின்றனர் சந்தையின் ஏற்பாட்டாளர்கள்.
கடைகளை அமைக்கச் செலவு அதிகரித்திருப்பதைச் சுட்டுகின்றனர் வியாபாரிகள்.
ரமதான் சந்தை 2 நாள்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
30 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட வடைக் கடைக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை 10,000 வெள்ளி.
அது இப்போது 18,000 வெள்ளியாக அதிகரித்துள்ளது.
கட்டண அதிகரிப்பும் புதிய கடைகள் வராததற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
சந்தையின் சில பகுதிகளில் காலியாகக் கிடக்கும் சுமார் 200 கடைகளை வியாபாரிகள் எவரும் இன்னும் கண்டுகொள்ளவில்லை.
கிருமிப்பரவலுக்குப் பிறகு பெரும்பாலோர் வீட்டிலிருந்தே வியாபாரம் செய்கின்றனர்.
மேலும், ரமதானுக்காகக் கிட்டத்தட்ட 10 சந்தைகள் திறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாகிவிட்டதாகச் சொல்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
ரமதானில் நோன்பு திறக்க விரும்புவோரை ஈர்ப்பதற்குப் புதிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சந்தையை அமைப்பதற்கான செலவு சுமார் 2.5 மில்லியன் வெள்ளி.
அடுத்த மாதம் 22ஆம் தேதி வரை ரமதான் சந்தை செயல்படும்.