Hin Leong Trading நிறுவனர் வழக்கு - சிறைத்தண்டனை 4 ஆண்டு குறைப்பு
வாசிப்புநேரம் -
Hin Leong Trading நிறுவனர் லிம் ஊன் குய்னின் (Lim Oon Kuin) மேல் முறையீட்டு வழக்கின் முடிவில் அவரது சிறைத்தண்டனைக் காலம் 4 ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது.
2024 நவம்பர் 18ஆம் தேதி 84 வயதாகும் அவருக்கு 17.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
OK லிம் என்றழைக்கப்படும் அவர் நூற்றுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். HSBC வங்கியை ஏமாற்றிய இரண்டு குற்றச்சாட்டுகளும் கையெழுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டன.
எண்ணெய் விற்பனை தொடர்பான 2 போலிப் பரிவர்த்தனைகளைச் செய்தது, Hin Leong நிறுவனத்துக்கு 150 மில்லியன் வெள்ளியைக் கடனாகப் பெற HSBC வங்கியிடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது ஆகியவை அந்தக் குற்றச்சாட்டுகள்.
லிம் தம் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
இன்று நடந்த விசாரணையில் நீதிபதி அவரது மேல்முறையீட்டை நிராகரித்தார்.
லிம்மின் வயதைக் கருத்தில் கொண்டு அவர் மீண்டும் குற்றம் புரிய வாய்ப்பும் குறைவு என்பதால் சிறைத்தண்டனைக் காலத்தைக் குறைப்பதாகத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.

தொடர்புடையது:
ஆதாரம் : Mediacorp Seithi