Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கோயில்களில் தங்க நகைகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன: இந்து அறக்கட்டளை வாரியம்

வாசிப்புநேரம் -
இந்து அறக்கட்டளை வாரியம் அதன் நிர்வாகத்தில் இருக்கும் 4 கோயில்களிலும் தங்க நகைகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தியிருக்கிறது.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடந்ததுபோன்ற தவறு இனி நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்தது.

தனது நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்களில் எல்லாத் தங்க நகைகளும் முறையான பாதுகாப்புடன் உள்ளன என்றும் நான்கு கோவில்களிலும் ஆண்டுக்கு நான்கு முறை கணக்குத் தணிக்கை செய்யப்படுகிறது என்றும் வாரியம் கூறியது.

அதில் அறிவிக்கப்படாத கணக்குத் தணிக்கைகளும் அடங்கும் என்று அது சொன்னது.

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் தங்க ஆபரணங்களை சுமார் 2 மில்லியன் வெள்ளிக்கு அடகுவைத்த கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கந்தசாமி சேனாபதிக்கு இன்று (30 மே) 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க தங்க நகைகளின் பாதுகாப்பும் நிர்வாகமும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக வாரியம் குறிப்பிட்டது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்