Skip to main content
இன்றைய Cross Street…அன்றைய பால்கடை சடக்கு!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

இன்றைய Cross Street…அன்றைய பால்கடை சடக்கு!

வாசிப்புநேரம் -

கிராஸ் ஸ்ட்ரீட் (Cross Street)...

இப்போது அது சைனாடவுனில் ஒரு சாலையாக இருக்கலாம்.

ஆனால் ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் யார் என்று தெரியுமா?

1836ஆம் ஆண்டு கோல்மன் (Coleman) வரைந்த சிங்கப்பூர் வரைபடத்திலேயே கிராஸ் ஸ்ட்ரீட் இருந்தது.

ஆகப் பழமையான சாலைகளில் கிராஸ் ஸ்ட்ரீட்டும் ஒன்று.

1820களில் கிராஸ் ஸ்ட்ரீட்டில் பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் இந்தியர்கள்தான்.

1820களில் இந்தியப் படகோட்டிகள் அங்கு வசித்தனர்.

ஆட்டுப்பால், மூலிகைகள் விற்கும் கடைகளை அவர்கள் நடத்தினர்.

அதனால் இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் அந்தச் சாலையை தங்களுடைய சொந்த பாணியில் அழைத்தனர்.

சீனர்கள் கியெட் லெங் கியா கோ (kiat leng kia ko) என்று அழைத்தனர்.

இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதி என்று அது குறிக்கிறது.

தமிழர்கள் “பால்கடைச் சடக்கு” என்று அதற்குப் பெயர் வைத்தார்கள்.

மலாய்க்காரர்கள் கம்போங் சுசு (Kampong Susu) அதாவது “பால் கம்பம்” என்று அழைத்தனர்.

அந்தக் காலத்தில் இந்தியர்களுடைய செல்வாக்கைக் காட்டும் ஆதாரமாக அந்தச் சாலை இருந்தது.

காலப்போக்கில சைனாடவுன் வட்டாரம் பெரிதானது.

அதிகமான சீனர்கள் அந்தப் பகுதிக்கு வந்தார்கள்.

1950களிலிருந்து 1970களின் இறுதி வரைக்கும் அந்தச் சாலை சீனப் புத்தகக் கடைகளுக்குப் பிரபலமானது.

கிராஸ் ஸ்ட்ரீட் என்று எப்படிப் பெயர் வந்தது?

அந்தச் சாலை முக்கியமான சாலைகளை இணைக்கிறது. அப்படிதான் கிராஸ் ஸ்ட்ரீட் என்று பெயர் வைக்கப்பட்டது.

பெயரைப் பார்க்கும்போது எளிமையாக தெரியலாம்.

ஆனால் அது தாங்கி நிற்கும் சரித்திரம் பெரிது!

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்