Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

HIV சோதனைக் கருவிகள் Guardian, Watsons கடைகளில் கிடைக்கும் - விரைவில்

வாசிப்புநேரம் -
HIV சோதனைக் கருவிகள் Guardian, Watsons கடைகளில் கிடைக்கும் - விரைவில்

(படம்: Ministry of Health)

சிங்கப்பூரில் தடுப்புச் சக்தி இழப்பு நோய் (HIV) இருப்பதைச் சுயமாகப் பரிசோதிக்கும் கருவிகள் விரைவில் கடைகளில் கிடைக்கும்.

வரும் ஜனவரி மாதம் Guardian, Watsons கடைகளில் அந்தக் கருவிகளை வாங்க முடியும்.

தடுப்புச் சக்தி இழப்பு நோய்க்கு (HIV) சுய பரிசோதனை செய்வது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.

இதற்குமுன் தடுப்புச் சக்தி இழப்பு நோய்க்குச் சோதிக்காதவர்கள் சுய பரிசோதனை செய்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.

நோய் இருப்பது அறிந்தால் விரைவாகச் சிகிச்சை பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

பரிசோதனை செய்துகொண்டால் மட்டுமே நோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று அமைச்சு சொன்னது.

சுய பரிசோதனையில் நோய் இருப்பது தெரிந்தாலும் மருத்துவரிடம் சென்று அதை உறுதிசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்