Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலர்பள்ளிகளில் கை, கால், வாய் புண் நோய் தொற்றியோரின் எண்ணிக்கை 2022இல் அதிகரித்தது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள பாலர்பள்ளிகளில் கை, கால், வாய் புண் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

அதற்கு முந்திய ஈராண்டுகளில் கை, கால், வாய் புண் நோய் கண்டோரின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

2022இல் நோய் கண்டோரின் எண்ணிக்கையின் அதிகரிப்பு இவ்வாண்டும் தொடருமா என்பது குறித்து இப்போதே உறுதிசெய்ய முடியாது என்பதைச் சுகாதார அமைச்சு சுட்டியது.

2018ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை, பாலர்பள்ளிகளில் 350இலிருந்து 1,073 பேர் வரை அந்நோயால் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் குழந்தைப் பருவத்தில் கை, கால், வாய் புண் நோய் ஏற்படுவது வழக்கம் என்றும், பள்ளிகளில் பலருக்கு அது பரவுவது அசாதாரணமானது அல்ல என்றும் அமைச்சு சொன்னது.

பாலர்பள்ளிகளில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
  • முன்கூட்டியே நோயைக் கண்டறிதல்
  • கைகளைக் கழுவுதல்
  • வாய், மூக்கு ஆகியவற்றை மூடுவது
  • உணவு, பானம், தனிப்பட்ட பொருள்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது
அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் என்று அமைச்சு குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்