Skip to main content
சீனப் புத்தாண்டு விழாக்காலத்தில் COVID
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீனப் புத்தாண்டு விழாக்காலத்தில் COVID-19, HMPVஐத் தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்?

வாசிப்புநேரம் -
சீனப் புத்தாண்டு விழாக்காலத்தில் COVID-19, HMPVஐத் தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்?

(படம்: AFP)

சீனப் புத்தாண்டு விழாக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

விழாக்காலத்தில் உற்றார் உறவினர்களுடன் ஒன்றுகூடும்போதும் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போதும் Human Metapneumovirus (HMPV) நோய்க்கிருமி , COVID-19 கிருமி ஆகியவை பரவுவதைத் தவிர்க்க சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம்.

2024இன் ஆண்டிறுதியில் சிங்கப்பூரில் HMPV நோய்க்கிருமிச் சம்பவங்கள் அதிகரித்தன.

சென்ற ஆண்டு (2024) சிங்கப்பூரில் COVID-19 கிருமிப்பரவல் தொடர்பிலான 83 மரணங்கள் நேர்ந்தன.

அதில் 78 விழுக்காட்டினர் முதியவர்கள்.

இவற்றைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரர்கள் விழாக்காலத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? அவர்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?

மருத்துவர் அசோக் குருப்புடன் (Asok Kurup) பேசியது 'செய்தி'.

இளம் பிள்ளைகள், மூத்தோர், குறைந்த நோய் எதிர்ப்புச்சக்தி உடையவர்கள் COVID-19, HMPV கிருமியால் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்றார் திரு அசோக்.

"பரிந்துரைக்கப்பட்ட அனைத்துத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வது முக்கியம். உடல்நலம் குன்றியிருந்தால் வெளிப்புறங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது," என்றார் அவர்.

சிங்கப்பூரில் பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இதுவரை COVID-19 நிலவரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க பெருமளவில் உதவியிருப்பதாகத் திரு அசோக் 'செய்தி'யிடம் கூறினார்.

சுய பரிசோதனை செய்து முன்கூட்டியே அறிகுறிகளைக் கண்டறிந்தால் நோய்க்கிருமி பரவுவதைத் தவிர்க்கலாம் என்று திரு அசோக் வலியுறுத்தினார்.

சுகாதாரத்துறை ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம். அவர்களது அன்புக்குரியவர்களும் அவ்வாறு செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அதுபோக, அடிக்கடி கைகளைக் கழுவுவது, தும்மும்போதும் இருமும்போது முகத்தைத் தொடாமல் இருப்பது, கை சுத்திகரிப்புத் திரவத்தைப் பயன்படுத்துவது ஆகியவை நோய்க்கிருமி பரவலைத் தடுக்க உதவும் என்றார் திரு அசோக்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்