Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"மத்திய கிழக்கின் முன்னேற்றங்கள் சிங்கப்பூரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்"

வாசிப்புநேரம் -
மத்திய கிழக்கின் முன்னேற்றங்கள் சிங்கப்பூரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.

கலாசார, சமூக மாற்றங்கள் அவற்றுள் சில.

சமயத்தின் விளக்கம், ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டினார்.

தேசியப் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்குக் கல்விக்கழகம் போன்ற அமைப்புகள் இது போன்ற விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாகத் திரு சண்முகம் சொன்னார்.

கல்விக்கழக வருடாந்திர கருத்தரங்கில் அவர் அதனைத் தெரிவித்தார்.

கருத்தரங்கில் குழு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

நாடுகள் அவற்றின் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கான வழிகள் ஆராயப்பட்டன.

உக்ரேன் போர் மத்தியக் கிழக்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்,ஈரானிய அணுசக்தி நெருக்கடி உள்ளிட்ட தலைப்புகள் தொட்டு பேசப்பட்டது.

அதோடு மத்தியக் கிழக்கில் தலைதூக்கியுள்ள அணுசக்திப் பெருக்கம் மீதும் அக்கறை எழுப்பப்பட்டது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்