Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டவர் இருவருக்குக் கௌரவக் குடிமகன் விருது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்காற்றிய வெளிநாட்டவர் இருவருக்குக் கௌரவக் குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.


தேசிய மருத்துவ ஆய்வு மன்றத் தலைவரான பேராசிரியர் ரங்கா ராம கிருஷ்ணன், Duke-NUS மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் டுவேன் குப்லர் (Duane Gubler) ஆகியோருக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் இஸ்தானாவில் இன்று விருதுகளை வழங்கினார்.

சுகாதாரப் பராமரிப்பு, உயிர் மருத்துவ அறிவியல் ஆகியவற்றில் உத்திகளை வகுத்துச் செயல்படுத்துவதிலும் தேசிய மருத்துவ ஆய்வு மன்றத்திற்கு வழிகாட்டுவதிலும் பேராசிரியர் ரங்கா ராம கிருஷ்ணன் பங்காற்றியுள்ளார்.

பேராசிரியர் டுவேன் குப்லர் சுகாதார அமைச்சு, தேசியச் சுற்றப்புற அமைப்பு ஆகியவற்றிற்காக சிங்கப்பூரின் பொதுச் சுகாதார உத்திகளை வடிவமைப்பதிலும் பல நிபுணத்துவ ஆலோசனைக் குழுக்களிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்