செம்பவாங் வெந்நீர் ஊற்று - புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு திறப்பு
காம்பாஸ் அவென்யூவில் அமைந்துள்ள இந்த வெந்நீர் ஊற்று வட்டாரவாசிகளிடையே பிரபலம்.

காம்பாஸ் அவென்யூவில் அமைந்துள்ள இந்த வெந்நீர் ஊற்று வட்டாரவாசிகளிடையே பிரபலம்.
அங்கு இன்னும் அதிகமானோர் வந்து பலனடையவேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய பூங்காக் கழகம் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டது.
2017 ஆம் ஆண்டில் பொதுமக்களிடம் அது குறித்து ஒரு கருத்து திரட்டப்பட்டது.
மக்கள் முன்வைத்த ஆலோசனைகளின் படி உணவகம், அதிகமான கழிப்பறைகள், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் வந்துபோக வசதி உள்ளிட்ட அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் பழங்கால உணர்வைத் தக்கவைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
செம்பவாங் வெந்நீர் ஊற்று பற்றிய தொகுப்பு இன்றிரவு 8.30 மணிச் செய்தியில்.