Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இதுவரை மே மாதத்தில் பதிவான ஆகச்சூடான நாள்..எப்போது?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பொதுவாக மே, ஜூன் மாதங்கள் என்றாலே சூடான வானிலைதான் நம்மில் பலருக்குத் தோன்றும்.

அவ்வகையில் சில நாள்களுக்கு முன்னர் மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் வெப்பநிலை பதிவானது.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) வெப்பநிலை ஆக அதிகமாக 36.7டிகிரி செல்சியஸாக இருந்தது.

இதற்கு முன்னர் 2010-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதியும் 2016-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதியும் ஆக சூடானதாகக் கருதப்பட்டன.

இரண்டு நாள்களிலும் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸாக இருந்தது.

இந்நிலையில் இம்மாதப் பிற்பாதியிலும் சூடான வானிலை தொடரும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

அன்றாட வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸுக்கும் 35 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

சில நாள்களில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்