ஹவ்காங் வீட்டில் தீ - இருவர் மரணம்

Facebook/ Singapore Civil Defence Force
ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் மூண்ட தீயில் இருவர் மாண்டனர்.
ஹவ்காங் ஸ்ட்ரீட் 91இல் உள்ள புளோக் 971இல் தீ மூண்டது என்று இன்று (9 ஜனவரி) மதியம் 12.40 மணியளவில் தகவல் பெற்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.
கட்டடத்தின் மூன்றாம் தளத்தின் வீட்டில் தீ மூண்டதாக அதிகாரிகள் Facebook பக்கத்தில் பதிவிட்டனர்.
வீட்டுக்குள் வல்லந்தமாகப் புகுந்த அவர்கள் படுக்கையறையில் இருவரைக் கண்டனர்.
அவர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர்.
முன்னெச்சரிக்கையாக அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் 30 பேர் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைக்கும் பணி தொடர்கிறது.