Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹவ்காங் தீச்சம்பவம் - வீட்டில் மூன்றாவது உடல் கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -
ஹவ்காங் தீச்சம்பவம் - வீட்டில் மூன்றாவது உடல் கண்டுபிடிப்பு

(படம்: ராகவ் சோலையப்பன்)

ஹவ்காங் வட்டாரத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் மேலும் ஒருவர் மாண்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹவ்காங் ஸ்ட்ரீட் 91, புளோக் 971இன் மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் இருவர் மாண்டதாக முன்னர் கூறப்பட்டது.

வீட்டில் தீ மூண்டதாக அதிகாரிகள் இன்று (9 ஜனவரி) மதியம் 12.40 மணியளவில் தகவல் பெற்றனர்.

வீட்டுக்குள் வல்லந்தமாகப் புகுந்த அவர்கள் படுக்கையறையில் இருவரைக் கண்டனர்.

அவர்கள் மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.

தீ மதியம் 3.15 மணியளவில் அணைக்கப்பட்டது.

பின்னர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் படுக்கையறையில் மேலும் ஒருவர் மாண்டதை அறிந்தனர்.

வீட்டிலிருந்து ஒரு பூனையும் ஒரு பறவையும் 8 முயல்களும் மீட்கப்பட்டதாக அவர்கள் கூறினார்.

தீ எப்படி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஆதாரம் : Others/Social media

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்